மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அதன் உறுப்பினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இராஜினாமா செய்துள்ளார். அதன் தலைவர் தனியாக தீர்மானங்களை எடுக்க முடியாது.
நேற்று (25) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மொஹான் சமரநாயக்க
இதுதெடர்பாக மேலும் தெரிவிக்கையில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் தலைவர் ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி கருத்து தெரிவித்தாலும், அது ஆணைக்குழுவின் பெரும்பான்மையான கருத்து அல்ல என அவர் தெரிவித்தார். தனக்கு தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.