ஐதராபாத்: மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்கோவாக் என்ற பெயரில் மூக்கு வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த டிச.23ல் ஒன்றிய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ரூ.325 என்ற விலையிலும், தனியாருக்கு ரூ.800 என்ற விலையிலும் இன்கோவாக் விநியோகம் வழங்கப்படுகிறது. இன்கோவாக் என்ற தடுப்பூசியை அமைச்சர்கள் மனசுக் மாண்டவியா, ஜிதேந்தர் சிங் அறிமுகம் செய்தனர்.
