தமிழகத்தில் பொது அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும், குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்தாலோ, மதுக்கடைகள், விற்பனைக் கூடங்களை திறந்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் மது கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.