ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவின் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்தார். இந்த நிலையில் கமலஹாசனின் மக்கள் நீதி மைய கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் “ஜனவரி 30 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்படும்” என பதிவிட்டு இருந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது நிலையில் மக்கள் நீதி மையத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளமான ட்விட்டரில் அக்கட்சியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் “மக்கள் நீதி மையம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிச்செயலுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்” என மக்கள் நீதி மையம் சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 27, 2023