காதலி உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆத்திரம் அடைந்த காதலன் தனது 70 லட்ச ரூபாய் காரை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் என்பவர் காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் காரில் வெளியே சென்றனர். அப்போது காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் சென்றபோது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.
இதனால் கடுமையாக ஆத்திரம் அடைந்த கவின் அவர்கள் இருவரும் பயணித்த 70 லட்ச ரூபாய் மதிப்பிலான பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதைப்பார்த்து காதலியும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸார், தீயணைப்பு துறையினரை வரவழைத்து எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in