தமிழில் வித்தியாசமான முயற்சி… பிரபலங்கள் கொண்டாடும் அயலி வெப்-சீரிஸ்

Ayali Webseries: பிரபல Zee5 ஓடிடியில் ‘அயலி’ வெப்-சீரிஸ் கடந்த ஜன. 26ஆம் தேதி வெளியானது. அறிமுக இயக்குநர் முத்துகுமார் இயக்கி, எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில் ‘அயலி’ உருவாகியுள்ளது.  8 எபிசோட்கள் உள்ள இந்த வெப்-சீரிஸில் அபி நக்ஷத்ரா, அனுமோல், அருவி மாடன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் அயலி தேவி என்ற சிறுமியின் வாழ்க்கையை கூறுகிறது இந்த ‘அயலி’ வெப்-சீரிஸ். மருத்துவராக வேண்டும் என்ற அயலியின் கனவு, அந்த கிராமத்தால் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பது இதன் மீதிக்கதை. குறிப்பாக, சிறுமிகள் பூப்படைந்த உடன் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கத்தை உடைய அந்த கிராமத்தில் அயலி எப்படி மீட்சியடைகிறாள் என்ற கதைக்கரு பலரையும் ஈர்த்துள்ளது. 

90s காலகட்டத்தில் நடக்கும் இந்த கதை, புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை கதைக்களமாக கொண்டுள்ளது. மொத்தம் 4 மணிநேரம் 15 நிமிட ரன்னிங் டைம் உடைய அயலி வெப்-சீரிஸை முதல் நாள் அன்றே பலரும் பார்த்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், திரை பிரபலங்களும் ‘அயலி’ வெப்-சீரிஸை பாராட்டி வருகின்றனர். 

தமிழில் பழக்கப்பட்ட த்ரில்லர், அமானுஷ்யம் ஜானரில் இல்லாமல் சமூக அக்கறையுடன் யதார்த்த பாணியில் உருவான அயலி வெப்-சீரிஸ் மக்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.  Zee5 ஓடிடியில் சந்தா செலுத்தி அயலி வெப்-சீரிஸை நீங்களும் கண்டுகளிக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.