டெல்லி: டெல்லியில் வசிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அன்னு கபூருக்கு (67) நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் உடனடியாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது. சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், ‘அன்னு கபூருக்கு சுவாச பிரச்னை உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருதயவியல் மருத்துவர்களின் கண்காணிப்பில். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்றார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்த அன்னு கபூர், நடிகராக மட்டுமின்றி பாடகர், இயக்குனர், ரேடியோ ஜாக்கி, டிவி தொகுப்பாளர் என்ற பன்முகம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.