ஒழலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று முடிந்துள்ளது. கும்பாபிஷேக விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால், மூலவர் விமானம் உள்பட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமிகளின் சன்னதிகளை சீரமைக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றன.
இந்நிலையில், இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றது. இதற்காக கோயில் முகப்பில் யாகசாலை அமைத்து சிறப்பு வேள்விகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து இன்று கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் மற்றும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் காலை 10 மணியளவில் யாகசாலை அமைத்து ஆராதனைகள் செய்யப்பட்ட புனித கலச நீர், மூலவர் விமானத்தில் உள்ள கலசத்தின் மீது அர்ச்சகர்கள் மூலம் ஊற்றப்பட்டது.
அப்போது, பக்தர்கள் `கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டனர். இதையடுத்து, மூலவருக்கு தீபாரதனை நடைபெற்றது. இதில், ஒழலூர் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
