இலங்கை வரும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்


அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட்
இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். 

அதன்படி இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி வரை அவர் நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும்
கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் அவர், அமெரிக்க – இந்திய வருடாந்த வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளில்
ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க – இலங்கை உறவு

இலங்கை வரும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் | Nuland Visits Nepal India Sri Lanka And Qatar

இலங்கையில், அமெரிக்க – இலங்கை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை குறிக்கும்
நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார். 

அத்துடன் பொருளாதாரத்தை
ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை
மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகள் தொடர்பில், துணைச் செயலாளர் நுலாண்ட் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.