சாருகேசி: திரைப்படமாகும் நாடகம்

அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்பது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த அமைப்போடு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, சோ, லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் பணியாற்றினார்கள். ஜெயலிதாவின் தயார் சந்தியா இந்த அமைப்பின் நிரந்தர நடிகையாக இருந்தார்.

இந்த அமைப்பு நடத்திய வியட்நாம் வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு, கவுரம் போன்ற நாடகங்கள் திரைப்படங்களாக தயாரானது. அந்த வரிசையில் தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வரும் சாருகேசி நாடகமும் திரைப்படமாகிறது. இதனை அவரே இயக்குகிறார்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இசை கலைஞனின் வாழ்க்கையை சுற்றி கதை நடக்கிறது. இந்த நாடகத்தை திரைப்படமாக ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி புரொடக்ஷன் தயாரிக்கவுள்ளது. இயக்குநர் வசந்த் எஸ்.சாய் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளதோடு கிரியேட்டிவ் இயக்குநராகவும் பங்காற்ற உள்ளார். ஒய் ஜி மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடித்து, இயக்குகிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறது.

நாடகத்தின் 50வது காட்சியில் திரைப்படத்தின் பணியை ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் ஒரு திரைப்படத்திற்குரிய அத்தனை அம்சங்களும் இந்த நாடகத்தில் இருக்கிறது. அதனால் இந்த படம் வெற்றி பெறும் அதற்கு எனது வாழ்த்துகள். நாடகத்தில் நீண்ட வசனம் கொண்ட ஒரே ஷாட் வரும். அது அப்படியே படத்திலும் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.