செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுமி, சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த 25 பேர் வேனில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி அருகே வேன் வந்தபோது திடீரென, பின் டயர் வெடித்துள்ளது.
இதனால் நிலைதடுமாறிய வேன் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் வானில் பயணம் செய்த 25 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை விட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுபிதா (12), கோகுல் (16), அஜித்குமார் (25) ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.