
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி
சென்னை : 'நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என வெளியான தகவலில் உண்மையில்லை' என, அவரது தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேசுக்கும், கேரளாவை சேர்ந்த ரிசார்ட்ஸ் உரிமையாளரான, கீர்த்தியின் பள்ளி தோழருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து, கீர்த்திசுரேஷின் தாய் மேனகா கூறுகையில், 'பரபரப்புக்காகவே கிளப்பி விடப்பட்ட தவறான செய்தி அது. அது போன்ற செய்தியை பார்க்கக் கூட நாங்கள் விரும்புவதில்லை. 'கீர்த்தியின் திருமணம் தொடர்பான சமூகவலைதள பசிக்கு, எங்கள் பதில் இதுதான். இதுப்பற்றி பேச எதுவும் இல்லை' எனக் கூறியுள்ளார்.