நூறு நாள் வேலை திட்டத்தில் கூடுதல் வேலை நாட்கள் எப்படி? எப்போது? – அமைச்சர் தகவல்

நூறு நாள் வேலை திட்டத்தினை பொறுத்தவரை கூடுதல் வேலை நாட்களை எந்த வகையில் வழங்குவதற்கான திட்டம் தயார் படுத்தி வருவதால் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் கிராமங்களில் பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் காணை, வீரமூர், பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் புதிய கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்
ஐ.பெரியசாமி
மற்றும் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கொசப்பாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 15 ஏக்கர் நிலத்தில் 5 ஆயிரம் மரக் கன்றுகளை அமைச்சர்கள் பெரியசாமி, பொன்முடி, மஸ்தான் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பனமலைபேட்டை பகுதியில் பெரியார் சமத்துவபுரத்தினை பார்வையிட்டு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கிராம மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதால் கிராம சாலைகளை மேம்படுத்த கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்தாயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்க 4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதால் அந்த பணிகள் ஒருமாதகாலத்தில் தொடங்கப்படும்.

மேலும், 10 ஆயிரம் கிலோ மீட்டர் வீதம் கிராமப்புறங்களில் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலையே எந்த முதலமைச்சரும் செய்யாததை தமிழக முதல்வர் செய்துள்ளதாக தெரிவித்தார். ஏழை எளிய மக்களுக்கு உருவாக்கப்பட்ட அரசாகவும் இந்தியாவின் தலைசிறந்த அரசாக தமிழக அரசு உள்ளதாக கூறினார்.

அதனை தொடர்ந்து, நூறு நாள் வேலை திட்டத்தினை பொறுத்தவரை கூடுதல் நாட்களை எந்த வகையில் வழங்குவது 40 ஆயிரம் கிராமங்களில் ஒரே நேரத்தில் பணிகள் நடைபெற திட்டத்தினை தயார்படுத்தி வருவதால் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

கடந்தாண்டு 148 சமத்துவபுரம் 90 கோடி செலவில் சீரமைக்கபட்டுள்ள நிலையில் இந்தாண்டு 88 சமத்துவபுரம் 68 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் சமத்துவபுரத்தினை கண்டுகொள்ளாமலையே அதிமுக அரசு செயல்பட்டதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.