முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா! பலியிடப்பட்ட 200 ஆடுகள், 300 சேவல்கள்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் 88-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் 200ஆடுகள் 300 சேவல்கள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியில் தயாரான பிரியாணி. 25க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோவில் ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். 88-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்வர். இந்நிலையில் இன்று காலை விரதமேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். 

நேற்று மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமிதரிசனம் செய்தனர். 

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சேவல்கள் முனியாசுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவார்கள். 

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் இந்த அன்னாதனத்தில் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் விடுதிகள் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். 

இந்த நிகழ்ச்சி பற்றி பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி சுவாமி வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் நடக்கும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி என்றனர். 

இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும் என பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த கொரோனா காலத்திலும் கூட அதிகமான பக்தர்கள் வருகை தந்து முனியாண்டி சுவாமியை தரிசித்ததாக வடக்கம்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.