திருச்சி மாவட்டத்தில் உள்ள காண்டோன்மென்ட் எஸ் பி ஓ காலனியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் மகள் அபிநயா வீட்டில் விளக்கு ஏற்ற சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவர் ஆடையின் மீது தீப்பிடித்து உள்ளது. வேகமாக பரவிய தீ உடல் முழுவதும் பரவியது.
அபிநயாவின் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் தீக்காயுடன் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.