Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் காதல் பற்றி அவுங்க அம்மா சொன்ன விஷயம்: தீயாய் பரவும் தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவரின் திருமணம் குறித்து அவரது தாயார் மேனகா அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்தார். அஜித்தின் வேதாளம் படத்தை தெலுங்கில் போலா சங்கர் என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தமிழில் லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நடிகர் விஜய்யும், கீர்த்தி சுரேஷும் காதலித்து வருவதாக சில விஷமிகள் இணையத்தில் வதந்தியை பரப்பி வருகின்றனர். மேலும் சங்கீதாவும், விஜய்யும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தியை கிளப்பி வருகின்றனர். இந்த விவகாரம் சில நாட்களாகவே இணையத்தில் பூதாகரமாக பரவி வருகிறது.

இதனிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் 13 வருடங்களாக ரிசார்ட் ஓனர் ஒருவரை காதலித்து வருவதாகவும் இன்னும் 4 வருடங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் சமூக வலைதளங்களில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

Ajith Kumar: ‘ஏகே 62’ படத்திலிருந்து விலகினாரா விக்னேஷ் சிவன்.?: வெளியான பரபரப்பு தகவல்.!

இது தொடர்பாக கீர்த்தியின் அம்மா மேனகா சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”முழுக்க முழுக்கப் பொய்யான, பரபரப்புக்காகக் கிளப்பி விடப்பட்டிருக்கிற செய்தி இது. இந்த மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட எங்களுக்கு விருப்பமில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான். மேற்கொண்டு இது தொடரபாக பேசுவதற்கு எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக கீர்த்தி சுரேஷின் திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thadi Balaji: நடிகர் தாடி பாலாஜி மனைவி திடீர் கைது: வெளியான பகீர் காரணம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.