Thadi Balaji: நடிகர் தாடி பாலாஜி மனைவி திடீர் கைது: வெளியான பகீர் காரணம்.!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களிலும் , விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து பிரபலமானவர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

தாடி பாலாஜி, நித்யா இருவரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் பேசி அந்த நிகழ்ச்சியின் போது சேர்ந்ததை போல் இருந்தாலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பின்னர் நித்யா தன்னுடைய மகள் போஷிகாவுடன் தனியாகவே வசித்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நித்யா தனது குழந்தையுடன் சென்னை மாதவரம் பகுதி சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Thalapathy 67: ‘தளபதி 67’ பட லுக்கா.? தீயா இருக்கே: வைரலாகும் புகைப்படம்.!

இந்த முன்விரோதம் தொடர்பாக நித்யா நேற்று நள்ளிரவு அந்த ஆசிரியரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். இன்று காலை எழுந்து தனது காரை பார்த்த போது சேதமடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் ஆசிரியர். பின்பு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்த போது, நித்யா காரை கற்களால் சேதப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

Dhanush: மோதலில் இறங்கிய தனுஷ், செல்வராகவன்: பரபரக்கும் கோலிவுட்.!

இது தொடர்பாக நித்யா மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.