அனிரூத் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: பிக்பாஸ் ஏடிகேவின் விருப்பம்

விஜய் டிவியில் அண்மையில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஏடிகே என அழைக்கப்படும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம். இலங்கயை பூர்வீகமாக கொண்ட இவர், இசையின் மீது ஆர்வம் கொண்டவர். ராப் பாடல்கள் மூலம் பிரபலமடைந்த ஏடிகே, விஜய் ஆண்டனி மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையமைப்பில் ஏற்கனவே ராப் பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நேரத்தில் தான் அவருக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் வாய்ப்பு தேடிச் சென்றது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்த அவர், உடனடியாக கிரீன் சிக்னல் கொடுத்து, பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆரம்பம் முதலே தனக்கென ஒரு பாணியில் அவர் விளையாடிய விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. தனக்கு ஏற்புடையதை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமலும், பிடிக்காததை முகத்துக்கு நேராக பளீச் என சொல்வதும் ஏடிகேவின் குணமாக இருந்தது. இதனை பிக்பாஸ் தமிழ் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.

இதனால் ஒவ்வொரு வார எலிமினேஷனிலும் தப்பித்துக் கொண்டே இருந்த ஏடிகே, இறுதிப்போட்டிக்கு மிக அருகாமையில் சென்று கடைசி 2 வாரங்கள் இருக்கும்போது எலிமினேட் ஆனார். இப்போது, பிக்பாஸ் வீடு என்ற கூட்டை விட்டு நிஜ உலகில் பயணிக்க தொடங்கியிருக்கும் அவர், மீண்டும் தன்னுடைய திரைப்பயணத்தை வெற்றிகரமாக தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்காக தமிழில் சினிமாவில் பிரபலமாக இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களை நேரில் சந்தித்து தனக்காக வாய்ப்பு கேட்க உள்ளார். டிவிட்டரிலும் இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ள ஏடிகே, அனிரூத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருடைய ஆசை விரைவில் நிறைவேற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.