மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126-ன்படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளின் விவரம்:
வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, தொலைக்காட்சி அல்லது பிற ஊடகங்கள் மூலம் தேர்தல் விஷயங்களைக் காட்டுவது தடை செய்யப்படுகிறது. வாக்கெடுப்பு முடிவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் 48 மணிநேரத்தில் பொதுக் கூட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே, அதுபற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது.
தொலைக்காட்சிகள் மூலம் எந்தவொரு தேர்தல் விஷயத்தையும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. இந்த விதிகளை மீறும் எந்தவொரு நபரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்.
தேர்தல்களின்போது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் மேற்கண்ட பிரிவு 126-இன் விதிகளை டிவி சேனல்கள் தங்கள் குழு விவாதங்கள் மற்றும் பிற செய்தி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் சில சமயங்களில் மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு காலகட்டத்தில் , தொலைக்காட்சி மூலம் தேர்தல் விஷயங்களைக் காட்டுவதை, மேற்கூறிய பிரிவு 126 தடைசெய்கிறது என்று தேர்தல் ஆணையம் கடந்த காலத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தப் பிரிவில் “தேர்தல் விஷயம்” என்பது தேர்தல் முடிவை பாதிக்கும் அல்லது பாதிக்கும் நோக்கம் கொண்ட அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது.
பிரிவு 126 இன் மேற்கூறிய விதிகளை மீறினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். கருத்துக் கணிப்புகளை நடத்துவதையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில் அதன் முடிவுகளைப் பரப்புவதையும் 126-வது பிரிவு – ஏ தடை செய்கிறது.