வெள்ளித்திரைக்கு இணையாக இப்போது சின்னத்திரை நடிகர்களும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக, தங்களின் அபிமான சீரியல்களின் நடிக்கும் நடிகர்களை தொடர்ச்சியாக பாலோ செய்து வருகின்றனர். அந்தவகையில், விஜய் டிவியின் பிரபல சீரியலான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகர் கிரணுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது, இந்த நியூஸ் சின்னத்திரை வட்டாரத்தில் வைரலாகியுள்ளது.
90ஸ் கிட்ஸின் பேவரைட் தொடர்களில் ஒன்று கனா காணும் காலங்கள். பள்ளி செல்லும் மாணவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இந்த சீரியலை இப்போதும் ரீவைண்டு செய்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் நடித்த நடிகர்களும் அந்த ரசிகர்களுக்கு இப்போதும் பேவரைட் தான். பள்ளிகளில் நடக்கும் சின்ன சேட்டைகள், அந்த அழகான சூழல் அனைத்தும் இந்த சீரியலில் தத்ரூபமாக காட்டப்பட்டிருக்கும். இது அப்போதைய பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஆஸ்தான சீரியலாக இருந்த கனா காணும் காலங்கள் கல்லூரிக் காலங்களாக மாறி, இப்போது எங்கேயோ பிரிந்து வாழ்க்கை நீரோட்டத்தில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இப்போதெல்லாம் அது ஒரு பசுமையான காலம் என்ற டையலாக்கை 90ஸ் கிட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் மீண்டும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த கிரண் பற்றிய நியூஸ் அவர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளது. அதுஎன்னவென்றால் அவரின் திருமணம் குறித்த செய்தி தான்.
கிரணுக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களை அழைத்து அந்த விஷேஷத்தை அவர் நடத்தியுள்ளார். அத்துடன் அந்த அழகிய புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால மனைவியுடன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.