தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர்


மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ரீடிங் அணியை வீழ்த்தியது.

FA Cup தொடர்

ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த FA Cup தொடர் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரீடிங் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது.

ஆனால் இரண்டாம் பாதியில் அனல் பறந்தது.

குறிப்பாக பிரேசிலின் கேஸ்மிரோ 54 மற்றும் 58வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து மிரள வைத்தார்.

அதில் ஒரு கோல், தூரத்தில் இருந்து வீரர்களை தாண்டி சென்று வலைக்குள் விழுந்தது. அதன் பின்னர் மான்செஸ்டர் வீரர் பிரெட் 66வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

சிறப்பான தடுப்பாட்டம்

அதற்கு பதில் கோலை ரீடிங் அணியின் அமடூஉ சலிஃப் 72வது நிமிடத்தில் அடித்தார். எனினும் மான்செஸ்டர் அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால், ரீடிங் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரீடிங் அணியின் ஆன்டி கர்ரோல் 65வது நிமிடத்தில் எதிரணி வீரர் கேஸ்மிரோவை பலமாக மோதியதால், சிவப்பு அட்டை காட்டப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் | Casemiro Stunning Goal Vs Reading Mu Won

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் | Casemiro Stunning Goal Vs Reading Mu Won



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.