நடிகை உர்ஃபி ஜாவேத்; உடலை மறைக்க ஆடை கொடுக்க முன்வந்த இளம்பெண்! – என்ன நடந்தது

மாடல் மற்றும் டி.வி நடிகையான உர்ஃபி ஜாவேத் அணியும் ஆடைகள் எப்போதும் சர்ச்சையை கிளப்பும் விதமாகவே இருக்கும். சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக வெளியில் வந்தார். இதனால் அவர்மீது பா.ஜ.க பெண் பிரமுகர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து மும்பை போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். உர்ஃபி ஜாவேத்தும் போலீஸார் முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். தன்னுடைய தொழிலுக்கு இது போன்ற ஆடை அவசியமாக இருக்கிறது என்று போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.

உர்ஃபி ஜாவேத்

இந்தப் பிரச்னை முடியும் முன்பு, உர்ஃபி மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு உர்ஃபி வந்திருந்தார். அவர் பத்திரிகையாளர்கள் முன்பு வந்தபோது, அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டனர். அவர் அணிந்திருந்த மேலாடை மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஐஸ் கிரீம் கப் போன்ற பிரா அணிந்திருந்தார். அவரின் இந்த நிலையைப் பார்த்த இளம்பெண் ஒருவர், உர்ஃபி ஜாவேத் மானத்தை காப்பாற்ற தன்னிடமிருந்த ஒரு கோட் ஒன்றை கொண்டு வந்து உர்ஃபியின் உடம்பை மூடமுயன்றார். உடனே கோபத்தில் உர்ஃபி பார்த்த பார்வையால் கோட் கொடுக்க வந்த பெண் அதிர்ச்சியாக நின்றுவிட்டார்.

அதோடு உர்ஃபியும் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் உர்ஃபி ஜாவேத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு முறை, `உர்ஃபி ஜாவேத்திடம் ஏன் ஆடைகளை குறைவாக அணிகிறீர்கள்?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, `கம்பளி ஆடைகள் அணிந்தபோது, உடம்பில் கடுமையான சூடு ஏற்பட்டது. எனவேதான் இப்போது உடல் முழுக்க ஆடை அணிவதை குறைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.