பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரபல யூடியூபர்! காரணம் என்ன?

பிபிசி ஆவணப்படம் தொடர்பாக தாம் தெரிவித்த சொந்த கருத்துக்கு பிரபல யூடியூபர் மதன் கௌரி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

2002இல் நிகழ்ந்த பிபிசி கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. குஜராத் கலவரத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஆவணப் படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்காணமாக, மத்திய அரசுக்கு பலரும் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். தடை விதித்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

கல்லூரிகளில் மாணவர்கள் அமைப்பினர்பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் காவல்துறை அதனை தடுத்து நிறுத்துவதிலும் வேகம் காட்டி வருகிறது.

மத்திய அரசு தடைவிதித்த போதிலும் ஆவணப்படமானது அண்மையில் வெளியானது. இந்நிலையில் பிபிசி ஆவணப்படம் குறித்து வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் மதன் கௌரி கருத்து தெரிவித்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தனிப்பட்ட கருத்து என்னவென்றால், நம் வீட்டில் அப்பா – அம்மாவிற்குள் ஏதேனும் தகராறு என்றால், அது அவர்கள்தான் சரி செய்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு மூன்றாவதாக வேறொரு வீட்டில் இருந்து வந்த ஒருவர் சொன்னால் அது நமக்கு அழகல்ல.

அதேபோல் நம் நாட்டிற்குள் நடக்கும் பிரச்னையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதனை வேறு ஒரு நாட்டிலுள்ளவர்கள் குற்றம் சொல்ல அனுமதிக்க கூடாது என்று கூறியிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதற்கு எதை எடுத்துக்காட்டாக கூறுகிறார் இவர் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து, மதன் கௌரி நெட்டிசன்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோ அகற்றப்படும். எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.