தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது.
தமிழக அரசு போதைப்பொருள் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அப்பொழுது சுற்றறிக்கைகள் வெளியிடுவது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் பொழுது தமிழக அரசை நீதிபதி புகழேந்தி பாராட்டியுள்ளார்.
மேலும் நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசு தரப்பில் இருந்து உரிய நடவடிக்கை மற்றும் பதில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதியப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்றம் செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகள் முறையாக பின்பற்றப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது” என உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.