சென்னை: ஆளின்றி தானாக மின்பயன்பாட்டைக்கணக்கெடுக்கும் ஸ்மார்ட்மீட்டர், தமிழகத்தில் முதல்கட்டமாக ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்பட உள்ளன.
தமிழக மின்வாரியம் வீடுகளில்2 மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கிறது. இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சிலர், குறித்த காலத்துக்குள் கணக்கெடுப்பது இல்லை என்றும், இதனால், அதிக கட்டணம் வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய அரசு உத்தரவின்படி, கர்நாடகா, டெல்லி உள்ளிட்டமாநிலங்களில் ஆளின்றி மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கும்தேதி, மென்பொருள் வடிவில்ஸ்மார்ட் மீட்டரில் பதிவேற்றம்செய்யப்பட்டு, தொலைத் தொடர்புவசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்படும். குறிப்பிட்ட நாள்வந்ததும் தானாகவே மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு, நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலம்தகவல் அனுப்பப்படும்.
இதனால், எவ்வித முறைகேடும், காலதாமதமும் இல்லாமல் மின்ப யன்பாடு கணக்கிடப்படும். தமிழகத்தில் சோதனை ரீதியாக சென்னை தியாகராய நகரில் ரூ.140 கோடி செலவில் 1.45 லட்சம் மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை தமிழகம்முழுவதும் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப விவரங்களை அளிக்கும் பணியைதமிழக தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்திடம் மின் வாரியம் வழங்கியது. இந்நிறுவனம் தனது அறிக்கையை மின்வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 2.30 கோடி வீட்டு மின்இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ஒரு கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அரசு அனுமதி வழங்கியதும் இந்தப் பணிஉடனே தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.