லிமா : தென் அமெரிக்க நாடான பெருவில், சுற்றுலா பயணியருடன் சென்ற பஸ், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 25 பேர் பலியாகினர்.
பெரு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுற்றுலா தலத்துக்கு செல்ல, 60 பேர் அடங்கிய குழுவினர், நேற்று பஸ்சில் சென்றனர். மலைப்பாதையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சிற்குள் சிக்கியோரை பத்திரமாக மீட்டனர். எனினும், இந்த விபத்தில் 25 பேர் இறந்தனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement