2019 ல் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு ?| How much is the Prime Ministers foreign travel expenses in 2019?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 2019-ம் ஆண்டு வரை பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு குறித்து,ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் விவரம் வருமாறு:

கடந்த 2019ம் ஆண்டு வரையில் பிரதமர் 21 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கான மொத்த செலவு ரூ.22 கோடியே 76 லட்சத்து, 76 ஆயிரத்து 934. தவிர முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எட்டு முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

latest tamil news

இதன் மொத்த செலவு, ரூ. 6 கோடியே, 24 லட்சத்து 31 ஆயிரத்து 424. மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 86 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மொத்த செலவு, ரூ. 20 கோடியே 87 லட்சத்து, 1475. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.