Thalapathy 67: தளபதி 67 பூஜையில் லோகேஷ் கொடுத்த ஹின்ட்..இதுல இவ்ளோ விஷயம் இருக்கா..!

கடந்த பல மாதங்களாக சினிமா ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்த ஒரே விஷயம் தளபதி 67 அப்டேட் தான். லோகேஷ் மற்றும்
கமல்
கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் மாஸ் ஹிட் அடித்ததால் அனைவரது பார்வையும் லோகேஷின் அடுத்த படமான தளபதி 67 மீது தான் இருந்தது.

மேலும் இவர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. எனவே லோகேஷ் எங்கு சென்றாலும் தளபதி 67 அறிவிப்பது பற்றியே ரசிகர்கள் முதல் நிருபர்கள் வரை கேட்டனர். அவரும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறி வந்தார்.

Thalapathy 67: தளபதி 67 படத்தில் நடிக்க மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற நடிகர்..இத்தனை கோடியா ?

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த தளபதி 67 அப்டேட் வெளியானது. என்னதான் இப்படத்தின் படப்பிடிப்பே ஆரம்பமானாலும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பே வெளியானது.

அதைத்தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியானது. இதையடுத்து நேற்று இப்படத்தின் பூஜை வீடியோ வெளியாகி படு வைரலானது. இந்நிலையில் இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் பல விஷயங்களை கூறி வருகின்றனர்.

வீடியோவில் லோகேஷ் பல ஹிண்ட்களை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கணித்து வருகின்றனர். அதாவது தளபதி 67 பூஜையில் லோகேஷ் சிவப்பு நிறத்தை சார்ந்த பல விஷயங்களை பயன்படுத்தியுள்ளார். இதை வைத்து ரசிகர்கள் CODE RED என்பதை லோகேஷ் சுட்டி காட்டியதாக கூறி வருகின்றனர்.

மேலும் கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் தளபதி 67 படத்தின் பூஜையில் இருக்கின்றார். எனவே தளபதி 67 படமும் கண்டிப்பாக LCU வை சார்ந்தது தான் என கூறி வருகின்றனர். இதையடுத்து விஜய் இப்படத்திலும் காப்பு அணிந்திருப்பதையும் சுட்டி காட்டி இப்படமும் LCU வை சார்ந்தது தான் என்கின்றனர் ரசிகர்கள். பூஜை வீடியோவை வைத்தே இவ்வளவு விஷயங்களை பேசும் ரசிகர்கள் படத்தின் டீசர் வந்ததும் என்னென்ன சொல்வார்களோ என்பது தெரியவில்லை..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.