அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த ஓபிஎஸ்-ன் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இடைக்கால மனுவாக, “இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணை செய்து, முக்கிய உத்தரவு ஒன்றையும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, “ஈரோடு இடைத்தேர்தலில் இருவருக்கும் (ஓபிஎஸ்-இபிஎஸ்) உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
* மேலும், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை, சேர்த்து பொதுக்குழு கூட்ட வேண்டும்,
* பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை, அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்,
* அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு பதில், பொதுக்குழு உறுப்பினர்களின் வேட்பாளர் தேர்வு கடிதத்தை பெற்று முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சுற்றறிக்கை மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற உள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கிறது.