
தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மதுரையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன், மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் எழுந்தருளும் தெப்பத்திருவிழா இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பக்தர்களின் வசதிக்காக ஒரு நாள் மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, பி.டி.ஆர். பாலம் வழியாக தெப்பக்குளம் செல்ல எந்த வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. விரகனூர் ரிங் ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் சாலை வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் தெப்பக்குளம் வழியாக வராமல் வைகை தென்கரை சாலை மூலம் குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும்.
பெரியாரிலிருந்து முனிச்சாலை ரோடு விரகனூர் சாலை வழியாக நூல் ரிங் ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் கணேஷ் தியேட்டர் சந்திப்பு சென்று ரிங் ரோடு செல்ல வேண்டும்.
தெப்ப திருவிழாவை காண வரும் பக்தர்களுக்காக அரசு பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் முகைதீன் ஆண்டவர் பெட்ரோல் பங்கில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிறுத்தம் வரை செல்லலாம்.
போக்குவரத்து மாற்றுத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை கொடுத்து மாற்று வழி தளத்தை பயன்படுத்தி சிரமம் இன்றி திருவிழாவை கண்டுகளிக்க மதுரை மாநகர காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
newstm.in