பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி: ரேக்ளா வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதியர்

சென்னையில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முறையில் திருமணம் செய்த கையோடு ரேக்ளா வண்டியில் புதுமண தம்பதியர் பயணம் செய்தனர்.
சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயி கோபால் – கண்ணகி தம்பதியர். இவர்களது மகன் விஜய் என்பவருக்கும் ஆனந்தன் – மேரி தம்பதியரின். மகள் ரம்யா என்பவருக்கும் அவர்களது குலதெய்வம் கோயிலில் திருமணம் நடைபெற்றுது. இந்நிலையில், மணமக்கள் வீடு திரும்பும் போது, தங்களது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ரேக்ளா வண்டியில் பயணம் செய்தனர்.
image
இதையடுத்து உற்சாக மிகுதியில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்கள் மீது மலர்களை தூவி வாழ்த்தியவரே சென்றனர். வாடகைக்கு பென்ஸ், ஜாக்குவார் கார்களை எடுத்து ஊர்வலமாக சென்று பந்தா காட்டி திருமணத்தை நடத்தும் பலர் மத்தியில், பாரம்பரியத்தை மறக்காமல் ரேக்ளா மாட்டு வண்டியில் சென்ற மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியதோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.