
விஜய் மில்டன் படத்தில் ஷாம்
நடிகர் ஷாம் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் பிஸியாகி வருகிறார். சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரராக நடித்தார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஷாம். இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்னும் சில முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்காக ஷாமுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இனிவரும் வருடங்களில் தன்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகும் என உறுதி செய்துள்ளார் ஷாம்.