Thalapathy 67: தளபதி 67 படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதுதான்..வெளிப்படையாக பேசிய நடிகர்..!

தற்போது தமிழ் திரையுலகத்தில் அனைவரது பார்வையும் தளபதி 67 படத்தின் மீது தான் உள்ளது. அதற்கு மிகமுக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். என்னதான் தளபதி 67 விஜய் படமாக இருந்தாலும் அவர் லோகேஷுடன் இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.

லோகேஷின் கதை சொல்லும் விதமும், அவரின் படங்களில் வரும் கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து அவர் இயக்கும் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவது ரசிகர்களால் ஈர்க்கப்படுகின்றது.

Rajini: சிகரெட் அடிக்காதீங்க அங்கிள்..ரஜினிக்கு சிறு வயதில் அட்வைஸ் செய்த பிரபல ஹீரோ..!

உதாரணத்திற்கு கைதி படத்தில் வரும் நெப்போலியன் கதாபாத்திரமும், விக்ரம் படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதுபோன்ற அழுத்தமான படங்களில் தங்கள் நாயகனை காண விஜய் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அந்த ஆசை தளபதி 67 படத்தின் மூலம் நிகழும் எனவும் எதிர்பார்க்கின்றனர். என்னதான் இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் அப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகவில்லை.

இந்நிலையில் தளபதி 67 முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் தான் உருவாகி வருகின்றது என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். எனவே இப்படத்தில் வித்யாசமான விஜய்யை நாம் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதில் மிகமுக்கியமான ரோலில் மலையாளத்தை சேர்ந்த மேத்தீவ் தாமஸ் நடிக்கின்றார்.

இந்நிலையில் இப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பேசிய தாமஸ், தளபதி 67 படத்தில் நான் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மேலும் தான் மிகப்பெரிய விஜய் ரசிகன் எனவும் கூறியுள்ளார் தாமஸ். இதையடுத்து இன்று தளபதி 67 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.