அதானி குழும வீழ்ச்சி: அன்றே கணித்த ராகுல் காந்தி?

அமெரிக்காவை சார்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமத்தின் மீது மிகப்பெரிய நிதி மோசடி குற்றசாட்டுகளை முன்வைத்தது. பங்கு சந்தைகளில் அதானி குழுமம் நினைத்து பார்க்க முடியாத ஊழலை செய்ததாக 106 பக்கங்களை கொண்ட அறிக்கை 32000 வார்த்தையுடன் வெளியானது. இதற்கு அதானி குழுமம் மறுப்பு அறிக்கையை வெளியிட்டு இருந்தனர்.

ஜனவரி 24 ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதில் இருந்தே, அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்தது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த அதானி முதல் 20 இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பேசி உள்ளார். அவர் கூறியதாவது; ராகுல் காந்தி ஏற்கனேவே அதானி குழுமத்தின் முறைகேடுகள், பாஜக அரசு அதானி குழுமத்திற்கு தனிப்பட்ட முறையில் உதவுவது குறித்து கூறியுள்ளார். அதானியால் முறைகேடு சேர்க்கப்பட்ட செல்வம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று ராகுல் கூறியிருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஹிண்டன்பர்க், அதானியின் நீண்டநாள் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக திக்விஜய் சிங் பேசினார்.

கொரோனா காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைவருக்கும் வருமானத்தில் குறைப்பு ஏற்பட்டது. ஆனால், சில தொழிலதிபர்கள் தங்களது சந்தை மூலதனம் அதிகரித்ததாக கூறி வந்தனர். அனைத்து சந்தைகளும், தொழில்களும் மூடப்பட்டு இருந்த சூழ்நிலையில் ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் அதிகரித்ததாக கூறுவது எந்த விதத்தில் சாத்தியம் என கேள்வி எழுப்பினார். இதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு மிகப்பெரிய கணக்கில் காட்டப்படாத தொகையை பெற்று இருப்பதாக குற்றம் சாட்டினார்.

களமிறங்கும் “கர்நாடக சிங்கம்”… காங்கிரசுக்கு செக் வைக்க பக்கா பிளான்?

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, அதானி குழும பங்குகளில் முதலீடு செய்ததால் நஷ்டத்தை சந்தித்தது. அதானியின் பங்குளை வாங்கிய நாடு மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தனர். இந்திய பாகு சந்தையிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை எல்ஐசி உடன் பார்க்கும்போது சிறிய அளவிலான தொகையை அதானியின் குழுமத்தில் வைத்துள்ளனர். ஆனால் எல்ஐசி பல அப்பாவி மக்களின் பணத்தை அதானி குழுமத்திடம் பறிகொடுத்துள்ளதாக திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமிட்ஷாவுடன் யாரெல்லாம் தொடர்பு வைத்து உள்ளனரோ, அவர்கள் எல்லாரும் அவர்களுடைய லாபத்தில் வரி சலுகையை பெறுவார்கள். இது அதானியின் விஷயத்தில் நடந்துள்ளது. பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அதானியின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கினை கொண்டு உள்ளனர். இதையே தான் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன்பே கூறியதாக திக்விஜய் சிங் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.