அமெரிக்க குற்றச்சாட்டு எதிரொலி; சென்னை மருந்து நிறுவனத்தில் ரெய்டு.!

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இந்தியர்கள் இன்னும் மீளாத நிலையில் உஸ்பெகிஸ்தானில் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மேரியன் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த Doc-1 Max இருமல் மருந்து உஸ்பெகிஸ்தானிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது. இதற்கிடையில் உஸ்பெகிஸ்தான் நாட்டு ஊடகங்களில், சம்பந்தப்பட்ட இருமல் மருந்தில் எத்திலீன் கிளைகால் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. இது மருந்துகளை ஆபத்தான ஒன்றாக மாற்றக் கூடியது.

இதை போதிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி தயாரிக்கின்றனர். இதே வேதிப்பொருள் கொண்ட இருமல் மருந்தை ஹரியானாவை சேர்ந்த மெயிடன் பார்மா என்ற நிறுவனம் தயாரித்ததன் விளைவாக காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த நிறுவனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த சூழலில் மற்றொரு துயர சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்து வருகின்றன.

அதைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு இருமல் சிரப் குடித்த கிட்டத்தட்ட 200 குழந்தைகள் கடுமையான சிறுநீரகக் பாதிப்புகளால் இறந்துள்ளனர். அதையடுத்து இந்தோனேசியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மீது பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொன்ற அல்லது குழந்தைகளின் உறுப்புகளை சேதப்படுத்திய, கடுமையான சிறுநீரக பாதிப்புகளுடன் தொடர்புடைய மருந்துகளை நாட்டுக்குள் அனுமதித்ததற்காக வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் சில சிரப் அடிப்படையிலான பாராசிட்டமால் மருந்துகளில் காணப்படும் எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகிய இரண்டு பொருட்கள் தான் குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் இந்திய மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்திய அமெரிக்கர்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாடு எழுந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்துவதால், கண் பார்வை பறிபோகும் நிலை ஏற்படுவதாகவும் மேலும் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையை சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் தயாரித்த EzriCare செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) பரிசோதித்து வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் EzriCare அல்லது Delsam Pharma’s Artificial Tears போன்றவற்றை வாங்க வேண்டாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்துள்ளது. அசுத்தமான மருந்துகளைப் பயன்படுத்துவது கண் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது குருட்டுத்தன்மை அல்லது மரணத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரத்தி எடுத்த அமைச்சர்

இந்தநிலையில் அமெரிக்கா நேற்று குற்றம்சாட்டிய நிலையில், சென்னையில் இயங்கி வரும் குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மற்றும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் தென் சென்னையில் இயங்கிவரும் குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டனர்.

‘‘பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் மாதிரிகள் தவிர, அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட தொகுதிகளிலிருந்து மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம். அமெரிக்காவிலிருந்து திறக்கப்படாத மாதிரிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அரசிடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளேன்’’ என தமிழக மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் பி.வி.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.