சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக உள்ளதாக பாஜக கூறியுள்ளது, மேலும் தமிழகத்தில் ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இபிஎஸ்க்கு ஆதரவு தரவேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ்-க்கு பாஜக அண்ணாமலை ஆதரவு ஓபிஎஸ் முடிவை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
BJP says it is keen on supporting candidate nominated by AIADMK interim general secretary Edappadi K Palaniswami, and it has asked O Panneerselvam faction to support its decision for February 27 bypoll to Erode (East) Assembly constituency in Tamil Nadu
— Press Trust of India (@PTI_News) February 4, 2023
ஈரோடு இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, இந்தத் தேர்தலை ஒரே திடமான சக்தியாக எதிர்கொண்டு, திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று அதிமுகவின் இரு பிரிவினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக, இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், இதனை, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என அதிமுகவின் இரு பிரிவின் தலைவர்களுக்கும் ஏறகனவே தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.
“எங்கள் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்… யாரோ ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி நாங்கள் வளர விரும்பவில்லை” என்று அண்ணாமலை கூறினார்.
தங்கள் கருத்தை பன்னீர்செல்வம் ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, ஆனால் அதற்க்கு ஓபிஎஸ் சில நிபந்தனைகளை விதித்தார் என்று சொன்னாலும், அவை என்ன என்பதை அவர் வெளியிடவில்லை. இரு பிரிவினரும் கருத்து வேறுபாடுகளை விரைவில் தீர்த்துக் கொள்வார்கள் என நம்புவதாக பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.