கோயம்பேடு சந்தை வெளிநாட்டு சந்தைகள் போல் மாற்றி அமைக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு சந்தைகள் போல் மக்கள் பயன்படுத்த சிறப்பான முறையில் கோயம்பேடு சந்தை மாற்றி அமைக்கப்படும்; கோயம்பேடு சந்தை பகுதியில் 8 ஏக்கர் அளவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-அமைச்சர் சேகர் பாபு பேட்டி.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாகத்திலுள்ள கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தின் காய்கறி மார்க்கெட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், CMDA தலைவருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு இன்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோயம்பேடு வணிக வளாகத்தில் ஏற்கனவே கடந்த மாதம் 8 ஆம் தேதி மலர் அங்காடிகள் ஆய்வு செய்து வியாபாரிகள் குறைகள் கேட்கப்பட்டது. தொடர்ந்து, இன்று 7 ஏக்கர் பரப்பளவில் 1985 கடைகளை கொண்ட காய்கறி சந்தையை ஆய்வு செய்தோம்.பல இடங்களில் குப்பைகள் காலை 10 முதல் 11 மணி அளவில் தான் அகற்றப்படுவதால் அதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஏற்கனவே திருவிழா நாட்களில் இரண்டு முறை குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டது என்றனர், இனி தினமும் இரு முறை குப்பைகளை அகற்றம் செய்யவேண்டும் என்றும், திருவிழா நாட்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் நாட்களில் கூடுதலாக ஆட்களை வேலைக்கு வைத்து குப்பைகளை அகற்ற வாகனங்களையும் ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.
மார்கெட் சார்ந்த சர்வீஸ் ரோடு பகுதிகள், 20 தெருக்கள் வரை அசுத்தமாக உள்ளன. அதனை சரி செய்ய சொல்லி உள்ளோம். திட்டு திட்டாக குப்பைகள் இருப்பதாக வழி சீராக இல்லை அதனையும் முறையாக சுத்தம் செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.ஒரு வாரத்திற்குள் கழிவறைகள் பிரச்சினைகளும் சரி செய்யப்படும். அரசு மட்டுமின்றி வியாபாரிகளும் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தால் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அப்புறப்படுத்தப்படும்.
3941 கடைகள் உள்ள பகுதியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் மேல் மக்கள் வரும் சந்தையை ஒழுங்குபடுத்தி வெளிநாட்டு மார்கெட் போல் மேம்படுத்த துறை உறுதி ஏறு செயல்பட்டு வருகிறோம்.முதற்கட்டமாக மலர் அங்காடி தொடர்ந்து இன்று காய்கறி சந்தை அடுத்து அடுத்து பழங்கள், உணவு தானியங்கள், பேருந்து நிறுத்தம் பகுதியையும் ஆய்வு செய்ய உள்ளோம்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்படும், படிப்படியாக அனைத்தும் மாற்றப்படும்.
சந்தைக்கு அருகில் 8 ஏக்கர் பகுதியில் பூங்கா அமைக்கவும் முதலமைச்சர் உத்தரவின் படி செயல்படுத்தி வருகிறோம். சந்தைக்கு வரும் மக்கள் மன அழுத்ததை குறைக்கும் வகையில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகள் இப்போது சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது, இன்னும் பெற்றுக் கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
image
தற்போது சேத்துப்பட்டு பயோ கேஸ் தயாரிப்புக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோயம்பேடு பகுதியிலேயே பயோ கேஸ் தயாரிப்புக்கான கட்டமைப்பு செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து வாகன நெரிசல் பிரச்சினை கடந்த நாட்களில் பண்டிகை காலங்களில் இருந்தது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் ஆதீனங்களின் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் சேகர் பாபுதிருச்செந்தூரில் கூட சமீபத்தில் ஆதீனத்தின் நிலங்களை மீட்க நாங்களும் ஒத்துழைப்பு தந்திருந்தோம். ஆதீனங்களும் இடங்களை அடையாளம் காட்டினால் அதனை மீட்பதற்கு இந்த சமய அறநிலைத்துறை உறுதுணையாக இருக்கும்.
இந்த ஆட்சியில் தான் வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு 4000 கோடி அளவில் சொத்துக்களை மீட்டுள்ளது, இந்த சமய அறநிலையத்துறை என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.