சிஎம் ஆ..? டெல்லிக்கே அண்ணாமலையை தூக்கும் பாஜக.. 2024க்கு பிறகு வருது மாற்றம்.!

தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு மே மாதத்துக்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.

இதனால் தேசிய அளவில் அண்ணாமலையின் செல்வாக்கு வளர தொடங்கிவிட்டதாகவும், மாநில அளவில் சுருண்டிக்கொள்ளும் தலைவராக நீண்ட நாள் அண்ணாமலை இருக்க மாட்டார் என்றும் அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தமிழக பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் சிலருக்கு அண்ணாமலைக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்கள் உள்ளபடியே கவலை அளிப்பதால் மிக விரைவில் அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பை கொடுத்து தூக்கவும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக அண்ணாமலைக்கு கர்நாடகாவில் உடுப்பி, சிக்மங்களூர் , பெங்களூர் போன்ற பகுதிகளில் செல்வாக்கு உள்ளது.

தமிழக பாஜகவில் வேறெந்த தலைவர்களுக்கும் இல்லாத இதுபோன்ற சிறப்புகள் அண்ணாமலைக்கு இருப்பதால் அவரை தேசிய அளவிலும் பயன்படுத்திக்கொள்ள பாஜக மேலிடம் தவறவிடாது என்பதுதான் உண்மை. இந்தநிலையில் அவருக்கு கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசியல் திறனாய்வாளர்களிடம் கேட்டபோது; அண்ணாமலைக்கு இது ஒரு ஆரம்பம் மட்டும்தான். அவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவை வளர்த்துக்காட்ட வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். அதற்காக, எந்த நேரத்தில் கூட்டணி கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது எந்த நேரத்தில் பாஜகவை முன்னிறுத்தி காட்டிக்கொள்வது என்ற வேலைகளை சிறப்பாக கையாண்டு வருகிறார்.

2024 தேர்தல் வரை அவர் தமிழ பாஜக தலைவராக இருப்பார் அதற்கு பிறகு கட்சியே அவரை தேசிய அளவில் இழுத்து கொள்ளும். அவருக்கு பிறகு வானதி சீனிவாசனுக்கு தலைவர் பதவி பிரகாசமாக உள்ளது என்றும் ஆனால் அந்த இடத்துக்கு அமர் பிரசாத் ரெட்டி ரூட் போட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.