சென்னை, பாடியநல்லூர் பாலாஜிநகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “ நான் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறேன். என் மனைவியின் பெயர் சுசிலா. எங்களுக்கு கனகபிரியா ( வயது 22) என்ற மகள் இருக்கிறார். அவர், பிகாம் முடித்து விட்டு பாலவாயல் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வங்கியில் வேலைப்பார்த்து வந்தார்.
கடந்த 21.9.2022-ம் தேதி எம்.கே.பி.நகரைச் சேர்ந்த ஒருவருடன் கனகபிரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகன் குடும்பத்தினர், திருமணம் செய்து கொள்ள காலம் தாழ்த்தி வந்தனர். நான் பல முறை திருமணத்தை உடனே நடத்த கூறியும், காலம் தாழ்த்தி வரவே கடந்த 2.2.2023-ம் தேதி இரவு கனபிரியாவிடம் மணமகன் வீட்டினர் ஏன் திருமணம் செய்து கொள்ள காலம் தாழ்த்துகிறார்கள் என்று கேட்டேன்.

அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகன் வீட்டினரை நான் திட்டியதும் என் மகள் கனகபிரியா, என்னிடம் கோபித்துக் கொண்டு படுக்கைக்கு அறைக்கு கதவை பூட்டிக் கொண்டாள். நான் இரவு 11.30 மணிக்கு கனகபிரியாவை சாப்பிட்ட அழைக்க அவளின் அறைக்கதவைத் தட்டினேன். நீண்ட நேரமாகியும் கதவை அவள் திறக்கவில்லை. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்று போய் பார்த்தபோது படுக்கையறையில் மின்விசிறியில், புடவையால் கனகபிரியா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனே நானும், என் மனைவி சுசிலாவும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த கனகபிரியாவை கீழே இறக்கினோம். பின்னர் பாடியநல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கனகபிரியாவை கொண்டு சென்று பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர் கூறினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புகாரின்பேரில். சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.