சொந்த சகோதரரால்… மகள் குறித்து தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்


வெளிநாட்டில் தனியாக வாழ்ந்து வருவதுடன், சமூக ஊடகத்தில் காணொளிகளை பதிவு செய்து வருவதாகவும் கூறி 22 வயது மகளை தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையால் ஆணவக் கொலை

ஈராக்கை சேர்ந்த 22 வயது திபா அல்-அலி என்பவரே ஜனவரி 31ம் திகதி தமது தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்டவர்.
குறித்த தகவலை ஈராக்கின் உள்விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாத் மான் தமது டுவிட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

துருக்கியில் வசித்து வந்த திபா அல்-அலி தமது உறவினர்களை சந்திக்கும் பொருட்டும், குடும்ப பிரச்சனையில் முடிவை எட்டும் பொருட்டு ஈராக்கிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், பொலிசார் அவரை தொடர்பு கொள்ளவும், அவர்களின் குடும்ப விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

சொந்த சகோதரரால்... மகள் குறித்து தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் | Youtube Star Honour Killing Sparks Outrage Iraq

Photograph: twitter

துருக்கியில் திபா அல்-அலி தனியாக வாழ்வது அவரது தந்தைக்கு உடன்பாடில்லை என்றே கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தில் பிரச்சனை நீடித்து வந்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அலி குடும்பத்தை தொடர்புகொண்டு விவகாரத்தை சுமூகமாக முடித்து வைக்க முயன்ற நிலையில், அடுத்த நாள் திபா அல்-அலி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, தமது மகளை கொலை செய்துள்ளதை அந்த தந்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் தந்தைக்கும் மகளுக்கும் நடுவே என்ன நடந்தது என்பதை அவர் வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.

திபா அல்-அலி யூடியூப் தளத்தில் தமது அன்றாட வாழ்க்கை தொடர்பில் காணொளிகளை பதிவு செய்து வந்துள்ளார்.
அதிகமானோர் அவரது காணொளிகளுக்கு ஆதரவும் அளித்து வந்துள்ளனர்.

சொந்த சகோதரரால் பாலியல் சீண்டல்

2017ல் திபா அல்-அலி மற்றும் குடும்பத்தினர் துருக்கி நாட்டுக்கு பயணப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர் அவர்களுடன் வீடு திரும்ப மறுத்து துருக்கி நாட்டிலேயே தங்கி, அங்கேயே வசித்து வந்ததாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

சொந்த சகோதரரால்... மகள் குறித்து தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் | Youtube Star Honour Killing Sparks Outrage Iraq

Photograph: twitter

திபா அல்-அலியின் மரணம் சமூக ஊடகங்களில் ஈராக்கியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது,
ஞாயிற்றுக்கிழமை பாக்தாத்தில் அவரது மரணத்திற்கு பதிலளிக்கும் வகையில் நீதி கோரி ஆர்ப்பாட்டங்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முதன்மை அரசியல்வாதி ஒருவர், உரிய சட்டங்கள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் இல்லாததால், நமது சமூகங்களில் பெண்கள் பின்தங்கிய பழக்கவழக்கங்களுக்கு பிணைக் கைதிகளாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமது சொந்த சகோதரரால் பாலியல் சீண்டல்களுக்கு இலக்கானதாலையே திபா அல்-அலி வீட்டைவிட்டு வெளியேறினார் எனவும் உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.