தமிழகத்தில் இன்று (04.02.2023) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (04.02.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலி

பாப்பான் குளம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

குத்தாலம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர  பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.