கோட்டா, ராஜஸ்தானில், ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 20 வயது மாணவர், விடுதியின் ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இஷான்ஷு பட்டாச்சார்யா. இவர், ராஜஸ்தானின் கோட்டாவில் தங்கியிருந்து மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற பல்வேறு பயிற்சி மையங்கள், கோட்டா நகரில் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி, இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இஷான்ஷு, ஆறாவது மாடியில் உள்ள விடுதி அறையின் பால்கனியில் நின்றபடி அறை நண்பர்களுடன் சமீபத்தில் பேசிக்கொண்டுஇருந்தார்.
அப்போது, நிலைதடுமாறி பால்கனியில் இருந்து, ‘அலுமினியம்’ தடுப்பு மீது விழுந்தார். எடை தாங்காமல் அந்த தடுப்பு உடைந்ததால், ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
முதலில் அவர் தற்கொலை செய்ததாக கருதப்பட்ட நிலையில், போலீஸ் தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement