தமிழ்நாட்டை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்துடன் வங்கி அல்லது தபால் வங்கி புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, உழவர் அட்டை, ஓட்டுனர் உரிமம், அரசிதழ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை இணைப்பதற்கான இணையதளம் முகவரி மற்றும் காலக்கெடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.