வாணி ஜெயராம் மறைவு இசை உலகிற்கு பெரும் இழப்பாகும்: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் (78) இன்று திடீரென்று மணமடைந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்தார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவரது மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் பிற்பகல் 2 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், தலைவர்கள், கலைஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; இனிமையான குரல் மற்றும் சிறந்த பணிகளுக்காக வாணி ஜெயராம் என்றும் நினைவுகூரப்படுவார்; அவரது மறைவு இசை உலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.