ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பலரும் கட்சி சார்பில்லாமல் சுயேட்சையாக வினோதமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
ஐந்தாவது நாளாக இன்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் நடக்கின்றது. அப்பொழுது, சென்னையை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விதவைப் போல உடை அணிந்து வேட்ப மனு தாக்கல் செய்ய வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி இதே கோலத்தில் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீஸ் தெரிவித்ததும், அதன்பின் அவர் சாதாரணமாக உடை அணிந்து கொண்டு மனு தாக்கல் செய்தார்.
இது பற்றி விசாரித்த போது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக தான் இருப்பதாகவும், டாஸ்மாக் கடையில் அதிக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு சான்றிதழ் எல்லாம் வழங்கப்பட்டது. இந்த நபர்களை விட மது குடித்து இறந்து போன நபர்களின் விதவை மாணவிகளின் எண்ணிக்கை அதிகம்.
இதை உணர்த்த தான் விதவை வேடத்தில் நான் வந்தேன். அந்த விதவை மனைவிகளின் சார்பாக சட்டப்பேரவையில் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார். மேலும், இவிகேஎஸ் இளங்கோவன் சட்டப்பேரவையில் விதவைகளுக்காக குரல் கொடுத்தால் என் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.