Vani Jayaram: பாடகி வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்துள்ள நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறை நூற்றாண்டுஇந்திய சினிமாவில் கடந்த அறை நூற்றாண்டு காலமாக பிரபல பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமாத்துறைக்குள் நுழைந்தார் வாணி ஜெயராம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஒடியா என 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.
Vani Jayaram: பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்… வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்!
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதிவாணி ஜெயராம் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்றும் அழைக்கப்பட்டு வந்தார். பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார் வாணி ஜெயராம். சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ளார் வாணி ஜெயராம். சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்தது. இந்நிலையில் பாடகி வாணி ஜெயராம் இன்று திடீரென மரணமடைந்துள்ளார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அவரது திடீர் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. Dancer Ramesh death: பயங்கரமா அடிச்சார்… டான்சர் ரமேஷ் சாகுறதுக்கு முன்னாடி நடந்தது இதான்.. கதறும் இன்பவள்ளி!
தனியாக வசித்து வந்த வாணிசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசித்து வந்துள்ளார் வாணி ஜெயராம். வாணி ஜெயராமின் கணவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து வாணி ஜெயராம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வாணி ஜெயராமின் தங்கை உமா சென்னை அடையாறில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாணி ஜெயராமின் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண் மலர்கொடி வழக்கம் போல் காலை 11 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளர்.
Leo: விஜய் கூட மல்லுக்கட்ட இத்தனை கோடிகளா? லியோ படத்திற்கு சஞ்சய் தத் வாங்கும் சம்பளம்!
தலையில் காயம்அப்போது நீண்ட நேரமாக காலிங் பெல்லை அடித்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வாணி ஜெயராமின் தங்கை உமாவுக்கு போன் செய்துள்ளார் மலர்க்கொடி, உடனடியாக வீட்டிற்கு வந்த மலர்கொடி போலீசாருக்கு நேரில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வாணி ஜெயராமின் வீட்டிற்கு வந்த போலீசார், கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தலையில் காயத்துடன் வாணி ஜெயராம் சடலமாக கிடந்துள்ளார். AK 62: காத்திருந்து… காத்திருந்து… கடைசியில் ஏமாந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்… கலங்கும் ரசிகர்கள்!
மரணத்திற்கான காரணம்இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் நடத்திய விசாரணையில் படுக்கையில் இருந்து எழுந்து போது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு வாணி ஜெயராம் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். கட்டிலுக்கு அருகிலேயே சடலமாக கிடந்துள்ளார் வாணி ஜெயராம். வாணி ஜெயராம் மரணமடைந்த தகவலை அறிந்ததும் ஒய்ஜி மகேந்திரன் தனது மனைவியுடன் அவர வீட்டிற்கு சென்றார். இதேபோல் பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு குவிந்து வருகின்றனர்.
இதுக்கெல்லாம் அடங்குற ஆளா நயன்தாரா!
vani jayaram