எடப்பாடி சீக்ரெட் பாலிடிக்ஸ்; ஓவர் நைட்டில் பிளான் சக்சஸ்; டரியலில் ஓபிஎஸ்!

அதிமுகவில் இரட்டை இலைக்கான போட்டி தான் லேட்டஸ்ட் ஹைலைட்டாக மாறியுள்ளது. தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றத்தில் தூங்கி கொண்டிருந்த அதிமுக பொதுக்குழு வழக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் தூசு தட்டப்பட்டுள்ளது. ஆனால் இடைக்கால மனுவிற்கு மட்டுமே உத்தரவு பிறப்பிக்கிறோம். பொதுக்குழு வழக்கில் மீண்டும் கை வைக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் கறாராக கூறிவிட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுஇதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. நீங்கள் ஏன் ஒன்றாக கைகோர்த்து ஒரே வேட்பாளரை நிறுத்தக் கூடாது? எனக் கேட்டது. அதற்கு எனது வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் கூறினார். இல்லை பொது வேட்பாளரை நிறுத்தலாம் என ஓபிஎஸ் தெரிவித்தார். இப்படி இருவரும் முரண்டுபிடிக்க உச்ச நீதிமன்றம் புதிதாக ஒரு அதிரடியை கிளப்பியது.
பொதுக்குழு கூட்டம்பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை முடிவு செய்யுங்கள் என உத்தரவு வந்தது. இது நிச்சயம் ஓபிஎஸ் தரப்பிற்கு பின்னடைவாக தான் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் தனக்கு ஆதரவு இருப்பதாக காட்டித் தான் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை பெற்றார் எடப்பாடி பழனிசாமி. இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அல்வா சாப்பிடுவது போல வந்துள்ளது.
​​
அவசரமாக பறந்த உத்தரவுபெரும்பான்மை உறுப்பினர்கள் தன் வசமிருக்க அதிமுக வேட்பாளரை ஒருமனதாக ஏற்கிறோம் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டு தலைமை கழகத்தில் ஒப்படைக்க உத்தரவு பறந்தது. இன்று (பிப்ரவரி 5) இரவு 7 மணிக்குள் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தங்கள் வேலையை முடித்தாக வேண்டும். இதனை மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மிகவும் கச்சிதமாக காய்களை நகர்த்தினார்.
தயாரான எடப்பாடிவரும் திங்கட்கிழமை பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் அளிக்க எடப்பாடி தரப்பு தயாராகி விட்டது. மறுபுறம் ஓபிஎஸ் தனக்கிருக்கும் ஆதரவு வட்டத்தை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. இது நீதிமன்றத்தில் எடுபடாது. எடப்பாடி தேர்வு செய்து கொண்டு வரும் வேட்பாளரின் கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானும் கையெழுத்து போட வேண்டும்.
இன்னும் 3 நாட்கள்அப்போது வைத்து கொள்ளலாம் கச்சேரியை என கணக்கு போட்டு வைத்திருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் கையெழுத்து போடவில்லை எனில் எடப்பாடி தரப்பு நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடிவிடும். அதன்பிறகு விஷயம் இழுபறியாக தான் செல்லும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் அனைத்தையும் கச்சிதமாக முடித்து விட வேண்டும்.
இரட்டை இலை யாருக்கு?அப்போது தான் பிரச்சாரக் களத்தில் எந்தவித சிக்கலும் ஏற்படாது. அதுமட்டுமின்றி இரட்டை இலை சின்னத்தை முடக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதால் எடப்பாடிக்கு மேலும் ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. பொதுக்குழுவின் ஆதரவை காட்டி இரட்டை இலையை தன் வசப்படுத்தி விடலாம். ஆனால் இவை அனைத்தையும் வெறுமனே வேடிக்கை பார்க்க ஓபிஎஸ் விரும்பவில்லை.
​​
நம்பிக்கை இல்லைஎடப்பாடியின் ஒவ்வொரு நகர்விற்கும் எப்படி கவுன்ட்டர் கொடுக்கலாம் தீவிர சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். இரட்டை இலை எடப்பாடிக்கு கிடைத்துவிட்டால் அதற்கு எதிராக வாக்கு சேகரிக்க வேண்டிய நிலை வந்துவிடும். அது புதிய சிக்கலை உண்டாக்கும். எனவே அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மீது நம்பிக்கை இல்லை என நீதிமன்றத்தில் பிளேட்டை திருப்பி விடவும் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.