கண்ணில் விரலை விட்ட சீனா; சுட்டு தள்ளி உளவு பலூனை பஸ்பமாக்கிய அமெரிக்கா!

உலகின் சர்வாதிகார மிக்க நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. தன்னை விட யாரும் வளர்ந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. அப்படி யாராவது தனக்கு இணையாக வளர்ந்து விட்டால் சீக்ரெட் ஆபரேஷனை களமிறக்கி மூலையில் உட்கார வைத்துவிடும். சமீபத்தில் மிகப்பெரிய பணக்காரரான அதானியை கதறவிட்டு ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதும் இதன் பின்னணி தான் எனக் கூறப்படுகிறது.

வெள்ளை நிற பலூன் மர்மம்

இந்நிலையில் சீனாவின் பலூன்கள் அமெரிக்க எல்லைக்குள் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை நிறத்தில் மிகவும் பெரியதாக பறப்பது கண்டறியப்பட்டது. வெறும் பலூன் என நினைத்த நிலையில் அதன்கீழே சென்சார்கள், கேமரா உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. பலூனின் செயல்பாடுகள் சோலார் பேனல்கள் மூலம் சூரிய ஒளி ஆற்றலை பெற்று ஹீலியம் வாயு உதவியுடன் இயங்கி வந்துள்ளது.

சீன பலூன்: அமெரிக்க வான் எல்லைக்குள் 2வது பலூன் நுழைந்ததால் பரபரப்பு

அதிர்ந்த பென்டகன்

அதுவும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் என்று சொல்லப்படும் பென்டகன் அருகே பறந்து சென்றுள்ளது. இதனால் உளவு பார்க்க தான் அனுப்பி வைத்துள்ளதாக சந்தேகம் எழுந்தது. உடனே யார் அனுப்பியது? எங்கிருந்து வந்தது? என கிடுகிடுவென விசாரணை தீவிரம் அடைந்தது. இந்த பலூன் தங்களுடையது அல்ல என்று முதலில் சீனா கூறி வந்தது.

வானிலை ஆய்வு

அதன்பிறகு வானிலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட பலூன் என ஒப்புக் கொண்டது. இதன்மூலம் உளவு பார்க்க முடியாது. அமெரிக்காவின் வான் எல்லைக்குள் அதிகப்படியான காற்று காரணமாக தவறுதலாக நுழைந்து விட்டது என்று விளக்கம் அளித்தது. இந்த பலூனை என்ன செய்யலாம் என்ற அமெரிக்க அரசு தீவிரமாக ஆலோசனை செய்தது. ஒன்றல்ல.

சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

இரண்டு பலூன்கள் அமெரிக்க வான் எல்லையில் தென்பட்டுள்ளன. இதனால் சுட்டு வீழ்த்த முடிவு செய்தது. அதிபரிடம் ஒப்புதல் கிடைத்தவுடன் அமெரிக்க ராணுவம் தயாரானது. எஃப்-22 விமானங்கள் அதிரடியாக புறப்பட்டன. அந்த உளவு பலூனை சுட்டு வீழ்த்தி சிதறடித்தது. இதன் பாகங்கள் சிதறி கிழக்கு கடல் பகுதியில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறைய வைக்கும் – 46 டிகிரி வெப்ப நிலை.. அமெரிக்காவை உலுக்கும் குளிர் வெடிப்பு..!

தீவிர தேடுதல் வேட்டை

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவற்றை அப்படியே விட்டு விடக்கூடாது என்று அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. இந்த பணியில் இரண்டு கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள், ஹெவி கிரேன் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

பலூனின் பாகங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் அதில் என்னென்ன இருந்தன? எதற்கான அனுப்பப்பட்டிருக்கும் போன்ற தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அந்நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.