முன்னாள் அமைச்சர் மற்றும் மகளுக்கு ஆசிட் வீச்சு கொலை மிரட்டல்!!

கடிதம் மூலம் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகளுக்கு ஆசிட் வீச்சு மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான ஜெய்பான் சிங் பாவையாவின் மகள் சமீதா சிங், குவாலியர் மாவட்டத்தில் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், 2 மாதங்களில் முன்னாள் அமைச்சர் கொலை செய்யப்படுவார் என்றும், சமீதா மீது ஆசிட் அடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம் 2022 நவம்பர் 4ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமைச்சர் ஜெய்பான் சிங் பாவையாவின் மகள் சமீதா சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தீவிர விசாரணை நடத்திய போலீஸார், தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், அடையாளம் தெரியாத நபர் எழுதியுள்ள மிரட்டல் கடிதத்தில், பணிபுரியும் இடத்தில் சமீதா மற்றொரு பணியாளருக்கு எதிரான போக்கை கைவிடும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இல்லை என்றால் கடிதத்தில் எழுதியுள்ளது போல் நடக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சமீதா பணி செய்யும் இடத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.