விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது! விஜயகாந்த் ஆதங்கம்


டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பயிர்கள் சேதம்

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து வேதனை தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது! விஜயகாந்த் ஆதங்கம் | Vijayakanth Emphasized Govt Help Farmers

@HT Photo

விஜயகாந்த் அறிக்கை

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக நகைகளை அடமானம் வைத்தும், வங்கிக் கடன்களை வாங்கியும் விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தாமதமின்றி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.  

விஜயகாந்த்/Vijayakanth



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.